×

கலை பண்பாட்டு விழாவில் பங்கேற்ற காரைக்கால் கலைஞர்களுக்கு கலெக்டர் பாராட்டு

 

காரைக்கால்,ஆக.24: காரைக்காலில் கலை பண்பாட்டு விழாவையொட்டி உள்ளூர் கலைஞர்களை அழைத்து கலெக்டர் மணிகண்டன் பாராட்டினார்.புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு இணையமும் இணைந்து காரைக்காலில் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற்ற கலை விழாவில் சிறப்பாக பங்கேற்றமைக்காக உள்ளூர் கலைஞர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் நேரில் அழைத்து பாராட்டினார்.அப்போது கலெக்டர் மணிகண்டன் கூறுகையில், உங்கள் கலைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஒரு பொழுது போக்கு அம்சம் உருவாகும்.

கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன் காரைக்காலை சேர்ந்தவர் என்பதால் உங்கள் நீண்ட கால குறைகள் ஏதேனும் இருப்பின் அமைச்சரை சந்தித்து கூறும் படியும் இதன் மூலம் உங்கள் கலைகளை மேம்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் தெரிவித்தார். நிகழ்வில் உள்ளூர் கலைஞர்கள் தம்பிமாரிமுத்து,ஆதர்ஷ் மற்றும் கலை பண்பாட்டு துறை அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.

The post கலை பண்பாட்டு விழாவில் பங்கேற்ற காரைக்கால் கலைஞர்களுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Collector ,Manikandan ,Karaikal Art and Culture Festival ,Festival ,Government Department of Art and Culture ,Thanjavur Southern Cultural Network ,Art and ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்