×
Saravana Stores

ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

 

கரூர், ஆக. 24: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில் இரண்டாவது நாளாக தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்போவதாக இந்த சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.அதனடிப்படையில், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாந்தோணி, கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, கடவூர் ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இவர்கள் இந்த போராட்டம் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடியே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu Rural Development Department Employees Union ,Rural Development Department ,Rural Development Department Employees Union ,Dinakaran ,
× RELATED காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட வேண்டும்: