×

திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரியில் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு

திருவள்ளூர்: சென்னையை அடுத்த திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் ஆகிய துறைகள் இணைந்து வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் மற்றும் ஏ1 என்ற தலைப்பில் சிறப்பு வழிகாட்டும் கருத்தரங்கு நடத்தப்பட்டது.  ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் க.நவராஜ், இணை செயலாளர் க.தீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.ராஜேந்திரன் வரவேற்றார்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை ஏ.சரவணன், மின்னணுமயமாக்கல் பொறியியல் துறையின் தலைவர் ஜி.கலாராணி, மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் தலைவர் அகஸ்டின் ஆகியோர் கருத்தரங்கு குறித்து விளக்கி பேசினர்.  இந்த கருத்தரங்கில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் விஸ்வ் எஜுகேசனின் இயக்குனர் வம்சி வல்லுரு, இயக்குனர் பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு திறன் மேம்பாட்டுக்கான வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஆகியவை குறித்து விவரித்து பேசினர்.

The post திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரியில் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Opportunities ,Jaya College of Engineering ,Thiruninnavur ,Tiruvallur ,Thiruninnavur Jaya College of Engineering ,Chennai ,Engineering ,Thiruninnavur Jaya Engineering College ,
× RELATED தூத்துக்குடியில் அமைய உள்ள...