புதுடெல்லி: வக்பு வாரிய சட்டதிருத்தம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் போது,பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இது தொடர்பாக காரசார விவாதங்கள் நடந்தன. கல்யாண் பானர்ஜி(திரிணாமுல்), சஞ்சய் சிங்(ஆம் ஆத்மி), அசாதுதீன் ஒவைசி(ஏஐஎம்எஐஎம்),ஏ.ராசா(திமுக) உள்ளிட்ட எம்பிக்கள் கலெக்டருக்கு அதிக அதிகாரங்கள்,முஸ்லிம் அல்லாதோரை உறுப்பினர்களாக்குவது உள்ளிட்ட சில உட்பிரிவுகளின் தேவைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற கூட்டுகுழு தலைவர் ஜெகதாம்பிகா பால், இந்த விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் கலந்தாலோசனை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒன்றிய சிறுபான்மை அமைச்சகம் தயார்படுத்தி வரவில்லை என்று கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் கருத்து தெரிவித்தனர். நாடாளுமன்ற கூட்டு குழுவின் அடுத்த கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
The post வக்பு வாரிய சட்ட திருத்தம் நாடாளுமன்ற கூட்டுகுழுகூட்டத்தில் சரமாரி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள் appeared first on Dinakaran.