×
Saravana Stores

வருமான வரி சட்டம் மறு ஆய்வு பணி தொடக்கம் 6 மாதத்தில் புதிய வரி சட்டம் தயார்: ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் தகவல்

புதுடெல்லி: வருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கு குழு தனது பணிகளை தொடங்கியுள்ளது என்றும் இன்னும் 6 மாதத்தில் புதிய வரிச் சட்டங்கள் தயார் ஆகிவிடும் என்று ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் தெரிவித்தார். 2024-25 ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ​​வருமான வரிச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும். சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதாக்குவதே இதன் நோக்கம்.

இது தகராறுகள், வழக்குகளை குறைத்து வரி செலுத்துவோருக்கு வரி செலுத்துவதை உறுதியாக்கும். இது வழக்குகளில் சிக்கும் கோரிக்கையை குறைக்கும். இதை 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இந்தியாவில் வருமான வரித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் கலந்து கொண்டனர்.

இதில் ரவி அகர்வால் பேசும்போது,‘‘கடந்த 1961ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வருமான வரி சட்டத்தில் மேம்பாடு ஏற்படுத்துவதற்கான பகுதிகளை கண்டறிந்து அதில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த வருமான வரிதுறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பழமையான வருமான வரிச் சட்டங்கள் தற்போதைய பொருளாதார தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.

அந்த குழுவினர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய பகுதிகளை அடையாளம் காண வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்கான வேலை நடந்து வருகிறது. நாட்டிற்கு புதிய நேரடி வரி சட்டத்தை நாட்டுக்கு வழங்குவதற்கான சிறந்த வழியை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்த படி குறிப்பிட்ட 6 மாத காலத்திற்குள் இந்த் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணி முடிக்கப்படும்’’ என்றார்.

The post வருமான வரி சட்டம் மறு ஆய்வு பணி தொடக்கம் 6 மாதத்தில் புதிய வரி சட்டம் தயார்: ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Board of Direct Taxes ,NEW DELHI ,Ravi Aggarwal ,Dinakaran ,
× RELATED புகை மண்டலமானது டெல்லியில் காற்று...