மண்டபம்: வேதாளை அருகே முருகன் கோயில் முன்பு அமைந்துள்ள குளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே எடையர் வலசை கிராம பகுதியில் ராமநாதபுரம்,ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை பக்தர்கள் அதிகமானவர் வருகை தருவார்கள். அதுபோல வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
அதுபோல ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு தனியார் வாகனங்களில் வருகை தரும் பக்தர்கள் இந்த கோயிலை பார்த்தவுடன் அருகேயுள்ள மரம் நிழலுக்காக ஓய்வெடுப்பதற்கும் மற்றும் இந்த பகுதியில் உணவு சமைப்பதற்கும் அதிகமான விரும்பி வருகின்றனர். இந்நிலையில் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பெரும்பான்மையான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த நிலையில் குளம் மிகவும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் நிரம்பி மாசுபட்டுள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் இந்த குளத்தை சுத்தம் செய்து மழை நீர் தேங்குவதற்கு ஆழப்படுத்த வேண்டும் என பக்தர்களும், கிராமப் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குப்பைகளால் அசுத்தம்; கோயில் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்: பக்தர்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.