- புதுக்குடி
- வடக்கு கிராமம்
- திருக்கடுப்பள்ளி
- புதுக்குடி வடக்கு கிராமம்
- இணை பேராசிரியர்
- சேகர்
- புதுக்குடி வடக்கு கிராமம்
திருக்காட்டுப்பள்ளி, ஆக. 22: புதுக்குடி வடக்கு கிராமத்தில் வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் வேளாண் இணை பேராசிரியர்சேகர் மானாவாரி நிலத்தில் சாகுபடி முறைகள் குறித்தும், அந்நிலத்திற்கேற்ற பயிர்கள் குறித்தும் பேசினார். மேலும், அதன் குணாதிசயங்கள், பயிர் ரகங்கள் குறித்தும், மானவாரி நிலத்தை பண்படுத்தும் முறைகள் குறித்து பேசினார். இதில், பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா கலந்து கொண்டு மாணவரி நிலத்தில் பயிரிடக் கூடிய பயிர்கள் அதன் ரகங்கள் குறித்தும், மண்ணை வளப்படுத்தும் தொழில்நுட்ப முறைகள் குறித்தும் கூறினார். பூதலூர் வட்டார வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சத்தியமூர்த்தி விவசாயிகளுக்கு ‘இ-நாம்’ எனும் மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்தும், உழவர் சந்தை குறித்தும் கூறினார். பூதலூர் உதவி தொழில் நுட்ப மேலாளர் பாலமுருகன் விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சி தாக்குதல் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
The post புதுக்குடி வடக்கு கிராம விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்கல் குறித்த பயிற்சி appeared first on Dinakaran.