×
Saravana Stores

வடகாடு ஊராட்சியில் வீராண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை

 

புதுக்கோட்டை, ஆக.22: வடகாடு ஊராட்சியில் உள்ள வீராண்டாள்கோயில் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி, மல்லிகைபுஞ்சையில் வீராண்டாள் கோவில் உள்ளது. இங்கு, வீராண்டாள், பெரிய கருப்பர், சின்னக்கருப்பர் உளிட்ட பரிவார சுவாமிகளுக்கு பூஜை நடைபெற்றது. இப்பூஜையையொட்டி ஊர் மக்கள் ஒரு மாதம் விரதமிருந்தனர். பூஜையின்போது ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் சாமி ஆடினர். மரக்கிளைக் கொண்டு அமைக்கப்பட்ட பச்சைக் கூடாரத்தில் ஒரு பெண் இரவு முழுவதும் தனிமையில் மருளாளியாக இருந்தார். பின்னர், 13 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. சுவாமி , அம்மனுக்கு படைப்பதற்காக பொங்கல், கறிக்குழம்பு ஆகியவை மண்பானைகளில் சமைக்கப்பட்டன. பின்னர், படையலிட்டு சாமி, அம்மனுக்கு வழிபாடு நடைபெற்றது. அப்போது, மருளாளி ஒருவர் அரிவாள் மீது ஏறி நின்று ஆடி, அருள் வாக்கு கூறினார். அதன்பிறகு, பூஜையில் கலந்துகொண்ட நூற்றுக்கும் ளேற்பட்டோருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது.

The post வடகாடு ஊராட்சியில் வீராண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Veerandal Temple ,Vadakadu Panchayat ,Pudukottai ,Veerandaal Temple ,Vadagadu Panchayat ,Mallikaipunjai, Vadagadu Panchayat ,Pudukottai District ,Veerandaal ,Periya Karupar ,Chinnakarupar ,Ulitta Parivar ,Swami ,
× RELATED பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சி கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்