- பஞ்சபதி
- கிருஷ்ணராயபுரம், ஆக
- முதல் அமைச்சர்
- ஸ்ரீ நாராயணபுரம்
- நபார்ட்
- கரூர் மாவட்டம்
- கிருஷ்ணராயபுரம்
- கால்நடை பராமரிப்பு திணைக்களம்
- கே. ஸ்டாலின்
- கரூர்
- பஞ்சாப்
- தின மலர்
கிருஷ்ணராயபுரம், ஆக. 22: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சபட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடங்களை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தொடர்ந்து கரூர் கலெக்டர் தங்கவேல் தலைமையில் குளித்தலை எம்எல்ஏ.மாணிக்கம் முன்னிலையில் கால்நடை மருந்தக கட்டிடத்தை பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி வைத்து கால்நடை வளர்ப்போர்க்கு தாது உப்புகளை வழங்கி சேவைகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் கரூர் மாவட்ட மண்டல இணை இயக்குநர் டாக்டர்.சாந்தி, குளித்தலை உதவி இயக்குநர் டாக்டர். ராஜேந்திரன், உதவி டாக்டர்கள். மலைராஜ், கோகுல், சிவானந்தம், திருமுருகன், கௌதம், திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்.கதிரவன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்.கரிகாலன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை உதவியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post பஞ்சபட்டியில் 54 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டிடம் appeared first on Dinakaran.