×
Saravana Stores

ஆண்டாள் கோயிலில் ரூ.12.42 லட்சம் உண்டியல் காணிக்கை

 

வில்லிபுத்தூர், ஆக.22: தேரோட்டம் முடிந்த பிறகு நேற்று முதல் முறையாக வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.12.42 லட்சம் வசூலாகியிருந்தது. வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. தேரோட்ட தினத்தன்றும் அதற்கு முன்பு சுமார் 10 நாட்களும் ஆண்டாள் கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வந்து சென்றனர். இந்த நிலையில் தேரோட்டம் முடிவடைந்த பிறகு நேற்று ஆண்டாள் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணுவதற்காக உண்டியல்கள் திறக்கப்பட்டன.

இதற்காக ஆண்டாள் கோவில் மற்றும் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் கோவில், பெரிய ஆழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் உண்டியல்கள் அனைத்தும் ஆண்டாள் கோவில் பிரகாரத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் உதவி ஆணையர் வளர்மதி, நிர்வாக அதிகாரி சக்கரத்தாய், ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல்கள் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்களும் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களும் பங்கேற்றனர். உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.12 லட்சத்து 42 ஆயிரத்து 736 வசூலாகியிருந்தது.

The post ஆண்டாள் கோயிலில் ரூ.12.42 லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Andal temple ,Villiputhur ,Chariot ,Villiputhur Andal Temple ,Villiputhur Andal ,Chariot Day ,Andal ,
× RELATED பூதத்தாழ்வார் உற்சவம் மாமல்லபுரத்தில் இன்று தேர் வீதியுலா