×

பொது இடங்களில் சாதி ஆடல், பாடல்கள் கூடாது

தூத்துக்குடி, ஆக. 22: தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்து உள்ளார்.
இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது இடங்கள் மற்றும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் சாதி ரீதியாக ஆடல், பாடல்களை ஒலிக்க விடுதல், சாதி ரீதியான கோஷங்களை எழுப்புதல், உடை அணிதல் ஆகியவை கூடாது. பொது இடங்களில் சாதி ரீதியிலான வண்ணங்கள், சின்னங்கள் வரைதலும் கூடாது. மேலும் சில அடையாள சின்னங்கள் அணிந்து சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

The post பொது இடங்களில் சாதி ஆடல், பாடல்கள் கூடாது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,SP Albert John ,Tuticorin district ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி சிறையில் மோதல் சம்பவம்: 46 கைதிகள் மீது 6 பிரிவுகளில் வழக்கு