×
Saravana Stores

புச்சி பாபு கிரிக்கெட் அரியானாவுக்கு எதிராக டிஎன்சிஏ-XI ரன் குவிப்பு: இந்திரஜித் 139*, லோகேஷ்வர் 99

கோவை: புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் 2வது சுற்று லீக் ஆட்டத்தில், அரியானா அணிக்கு எதிராக டிஎன்சிஏ லெவன் அணி முதல் இன்னிங்சில் அபாரமாக ரன் குவித்து வருகிறது. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன் குவித்துள்ளது (89.2 ஓவர்). அதிரடியாக விளையாடி சதம் அடித்த பாபா இந்திரஜித் 139 ரன் (197 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். தொடக்க வீரர் லோகேஷ்வர் 99 ரன் (203 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி நிஷாந்த் சிந்து பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அஜிதேஷ் 11, பிரதோஷ் ரஞ்சன் 2, பூபதி குமார் 34, மோகித் ஹரிஹரன் 20, சோனு யாதவ் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சாய் கிஷோர் (0) களத்தில் உள்ளார். அரியானா பந்துவீச்சில் காம்போஜ் 2, அஜித், சுமித், நிஷாந்த், ஹிமான்ஷு தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* நெல்லையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்க அணியுடன் மோதும் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க அணி முதல் இன்னிங்சில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (70.4 ஓவர்). ஷரண்தீப் சிங் 78, குமார் சுராஜ் 24, சஹில் ராஜ், பங்கஜ் குமார் தலா 20 ரன் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் தனே தியாகராஜன் 5, சி.வி.மிலிந்த், ரோகித் ராயுடு தலா 2, அனிகேத் ரெட்டி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஐதராபாத் முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்துள்ளது.

* சேலத்தில் நடக்கும் போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணிக்கு எதிராக டிஎன்சிஏ தலைவர் லெவன் அணி 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்துள்ளது. ஆந்த்ரே சித்தார்த் 81, மாதவ பிரசாத் 47, விமல் குமார் 42, பத்ரிநாத் 22, ராதாகிருஷ்ணன் 5, ரித்திக் ஈஸ்வரன் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினர். முகமது அலி 62 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

* நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீருடன் மோதும் பரோடா முதல் இன்னிங்சில் 255 ரன்னுக்கு சுருண்டது (நினத் ரத்வா 111, ஷிவாலிக், அபிமன்யுசிங் தலா 32 ரன்). ஜம்மு தரப்பில் சஹில் லோத்ரா 5, அபித் முஷ்டாக் 4, விஷால் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்துள்ளது.

The post புச்சி பாபு கிரிக்கெட் அரியானாவுக்கு எதிராக டிஎன்சிஏ-XI ரன் குவிப்பு: இந்திரஜித் 139*, லோகேஷ்வர் 99 appeared first on Dinakaran.

Tags : DNCA ,-XI ,Buchi Babu Cricket ,Ariana ,Indrajith ,Lokeshwar 99 ,Coimbatore ,Buchi Babu Cricket Series ,XI ,Sri Ramakrishna College ,Buchi ,Babu ,Cricket ,TNCA ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு!