- ஜகன் மோகன்
- ஆந்திரப் பிரதேசம்
- திருமலா
- முதல் அமைச்சர்
- ஜெகன்மோகன் ரெட்டி
- ஆந்திரா
- பிரதேசம்
- தாதேபள்ளி அரண்மனை
திருமலை: கடந்த 2019ம் ஆண்டு முதல் 2024 வரை ஆந்திர முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த வீடான தாடேபள்ளி பேலசில் முதல்வரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு முட்டை பப்ஸ் செலவாக மட்டும் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்து 51 ஆயிரத்து 340 என ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.3 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரத்து 700 செலவு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர டிபன், காபி இதர செலவுகள் தனி என சமூக வலைதளங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டு பதிவு செய்துள்ளனர். இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரை ஒரே இரவில் எக் பப்ஸ் ரெட்டி என தெலுங்குதேசம் கட்சி மாற்றி குறிப்பிட்டு சமூக வளைதளத்தில் பரப்பி வருகிறது.
The post ஜெகன்மோகன் அலுவலகத்துக்கு ரூ.3.5 கோடிக்கு முட்டை பப்ஸ்: ஆந்திராவில் புது சர்ச்சை appeared first on Dinakaran.