- தமிழ்நாடு மின் வாரியம்
- Icourt
- சென்னை
- தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம்
- புருஷோத்தமன்
- திருவள்ளூர்
- தலைமை நீதிபதி
- டி.கிருஷ்ணகுமார்
- தமிழ்நாடு மின் வாரியம்
- தின மலர்
சென்னை: காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 36,000 காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மின்வாரிய கேங்மேன் சங்கத்தினர் நாளை போராட்டம் அறிவித்திருந்தனர். பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். விழா காலங்கள் நெருங்கி வரும் நிலையில் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மின்வாரியம் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேங்மேன் தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்றும் மின்வாரிய தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒப்பந்தம் அல்லது தற்காலிகமாக காலி இடங்களை நிரப்ப அறிவுறுத்தி, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
The post காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு மின்வாரியம் தகவல் appeared first on Dinakaran.