- ஆனைமலையன்பட்டி குளத்துக்கரை
- பிறகு நான்
- குளுதுக்கரை
- ஆனைமலையன்பட்டி
- தேனி மாவட்ட கலெக்டர்
- தேனி மாவட்டம்
- கோகிலாபுரம் ஊராட்சி
- குலத்துக்கரை
தேனி, ஆக. 21: ஆனைமலையான்பட்டி கிராமத்தில் குளத்துக்கரையில் குடியிருக்கும் 55 குடும்பத்தினர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனி மாவட்டம், கோகிலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆனைமலையான்பட்டி கிராமத்தில் குளத்துக்கரையில் 55 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குளத்துக்கரையில் குடியிருப்பவர்களை காலிசெய்யச் சொல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, நேற்று ஆனைமலையான்பட்டி குளத்துக்கரை பகுதியை சேர்ந்த 55 குடும்பத்தினர் தேனியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக புதிய பண்ணை வளாகத் திறப்பு விழா நடந்த பகுதிக்கு வந்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் தேனித் தொகுதி எம்.பி தங்கதமிழ்செல்வன் ஆகியோரிடம் குளத்துக்கரையில் வசிக்கும் தங்களை உடனடியாக காலிசெய்ய பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளதால் மாற்று இடம் வழங்க வலியுறுத்தினர்.
இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மற்றும் எம்பி ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். அப்போது எம்.எல்.ஏக்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன், தேனி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி, வீரபாண்டி சேர்மன் கீதாசசி ஆகியோர் உடனிருந்தனர்.
The post ஆனைமலையான்பட்டி குளத்துக்கரையை சேர்ந்த 55 குடும்பத்தினர் மாற்று இடம் கோரி மனு appeared first on Dinakaran.