×

பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை கண்டியூரில் 5 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

 

திருவையாறு, ஆக.21: திருவையாறு அருகே உள்ள கண்டியூர் தனியார் மண்டபத்தில் நடந்த ‘மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில்’ 5 ஊராட்சிகளைச் சேர்ந்தோர் மனுக்களை அளித்தனர்.
முகாமிற்கு, சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

முகாமில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அரசாபகரன், தாட்கோ திட்ட மேலாளர் ரவிச்சந்திரன், தாசில்தார் தர்மராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அனிதா, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கலைச்செல்வி, ஒன்றிய ஆணையர்கள் சங்கரி, பொற்செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் திருப்பந்துருத்தி ஜெயசீலன், கண்டியூர் பாசிலாஜாஸ்மின், ஊராட்சிமன்றத் தலைவர்கள் கண்டியூர் ஜெயபாலன், ஆவிக்கரை ஜெகதீசன், கீழதிருப்பந்துருத்தி காயத்ரி, திருச்சோற்றுதுறை ரேவதி, கல்யாணபுரம் 2-ம் சேத்தி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

 

The post பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை கண்டியூரில் 5 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kandiyur ,Thiruvaiyaru ,People with Chief Minister Project Special Camp ,Kandiyur Private Hall ,Durai Chandrasekaran ,Thanjavur ,Murasoli ,
× RELATED முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று...