×
Saravana Stores

முகத்தை அடையாளம் காணும் வகையில் ரயில் நிலைய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு: அனைத்து மண்டலங்களுக்கும் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ரயில்வே ஸ்டேஷன் ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய முகத்தை அடையாளம் காணும் வகையில் அல்லது பயோமெட்ரிக் வருகைப்பதிவு இயந்திரங்களை அமைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 17 மண்டலங்களின் ரயில்வே பொது மேலாளர்களுக்கு, ரயில்வே வாரியம் எழுத்துப்பூர்வமாக அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு:

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களின் பணி மாற்றம் மற்றும் ஸ்டேஷன் ஊழியர்களால் கூடுதல் பணி நேரத்தை கோருவதில் உள்ள முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ரயில்வே வாரியத்தின் விஜிலென்ஸ் இயக்குநரகம் ஒரு குறிப்பை அளித்துள்ளது. இது சம்பந்தமாக, ரயில்வேயில் சில மேம்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர்கள், ஸ்டேஷன் சூப்பர்வைசர்கள் மற்றும் பாயின்ட்ஸ்மேன்கள் உள்பட அனைத்து ஸ்டேஷன் ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை இயந்திரங்கள் அல்லது முக அங்கீகார வருகை அமைப்பு நிறுவப்பட வேண்டும்.

இந்த டிஜிட்டல் வருகை பதிவுகளை செயலாக்கத்துடன் இணைக்கலாம். ஓவர் டைம் அலவன்ஸ் சேர்க்கையானது இந்த அடிப்படையில் இனி கணக்கிடப்படும். எதிர்காலத்தில் தவறுகளைத் தவிர்க்க, இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

The post முகத்தை அடையாளம் காணும் வகையில் ரயில் நிலைய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு: அனைத்து மண்டலங்களுக்கும் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Railway Board ,Dinakaran ,
× RELATED பாதுகாப்புக்கு ஆபத்து ரயில்...