×

குடற்புழு நீக்க சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் நாளை மறுநாள் கடைபிடிக்கப்பட்டு அதற்கான முகாம் நடைபெறுகிறது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 30ம் தேதி நடைபெறும். குடற்புழு நீக்கத்திற்காக அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1 முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் அல்பெண்டசோல் மாத்திரை விகிதத்தின்படி மையத்தில் வழங்கப்படும். இதில் குழந்தைகள் 7,75,834 பேருக்கும், பெண்கள் 2,67,105 பேருக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,428 பள்ளிகளிலும், 443 தனியார் பள்ளிகளிலும், 79 கல்லூரிகளிலும், 1754 அங்கன்வாடி மையங்களிலும் மொத்தம் 3,704 மையங்களில் 4322 பணியாளர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. எனவே அனைவரும் இந்த குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என கலெக்டர் த.பிரபுசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post குடற்புழு நீக்க சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : National Deworming Day ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை அரசு பள்ளிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிப்பு