- மேற்கு வங்கம்
- வங்காளம்
- மாநில அமைச்சர்
- திரிணமுல்
- Kattam
- கொல்கத்தா
- மாநில அமைச்சர்
- கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- திரிணாமூல் எம்பி
கொல்கத்தா: மேற்குவங்கத்தை மற்றொரு வங்கதேசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று மாநில அமைச்சர் காட்டமாக கூறிய நிலையில், போராடும் மருத்துவர்களுக்கு எதிராக திரிணாமுல் எம்பியும் குற்றம்சாட்டி உள்ளார். கொல்கத்தா பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவரது கட்சியை சேர்ந்த சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் திரிணாமுல் எம்பி அருப் சக்ரவர்த்தி வெளியிட்ட பதிவில், ‘மருத்துவர்களின் தொடர் போராட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால், நாங்கள் மருத்துவர்களைப் பாதுகாக்க மாட்டோம். போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் உங்களது நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஒரு சாக்காகப் பயன்படுத்துகின்றீர்கள். உங்களது போராட்டத்தால் ஒரு நோயாளி இறந்தால் கூட, பொதுமக்கள் உங்களுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அப்ேபாது உங்களுக்கு எங்களால் உதவ முடியாது’ என்றார்.
இதற்கிடையே மாநில அமைச்சர் உதயன் குஹா அளித்த பேட்டியில், ‘முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி பேசுபவர்கள் நசுக்கப்படுவார்கள். அவரை ராஜினாமா செய்ய கோருபவர்களின் கோரிக்கை ஒருபோதும் நனவாகாது. மேற்குவங்கத்தை மற்றொரு வங்கதேசமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறினார். மேற்குவங்கத்தில் தொடர் போராட்டங்கள் நடப்பதால், ஆளுங்கட்சி சேர்ந்த முக்கிய தலைவர்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
The post மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் மேற்குவங்கத்தை மற்றொரு வங்கதேசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்: மாநில அமைச்சர், திரிணாமுல் எம்பி காட்டம் appeared first on Dinakaran.