- அம்மன் வீதியுலா
- அவனி திருவிழா
- நாச்சிகுளம் கோவில்
- முத்துபேட்டை
- நாச்சிகுளம்
- காளியம்மன்
- வீரமாகாளியம்மன்
- கோவில்
- வீரமா காளியம்மன் கோவில்
- முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்
- அம்மன் வேதி உல்லா
- தின மலர்
முத்துப்பேட்டை, ஆக.20: நாச்சிக்குளம் பெரியநாயகி, காளியம்மன், வீரமா காளியம்மன் கோயில் ஆவணி திருவிழாவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் பெரியநாயகிம்மன், காளியமன், வீரமாகாளியமன் கோயிலின் 10-ஆம் ஆண்டு ஆவணி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக பல்வேறு வழிபாடுகளுடன் காலை பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் சாமிக்கு பால்குடம் அபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் சிறப்பு அர்ச்சனை மாவிளக்குபோ டுதல் நடைபெற்ற பின்னர் அன்னதானம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றிரவு அம்மாள் வீதியுலா காட்சிகள் நடைபெ ற்று முக்கிய பகுதிகளுக்கு சென்று வந்தது. இதில் அர்ச்சகர் சட்டநாத சிவாச்சாரியார் உட்பட சுற்று பகுதி கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
The post நாச்சிக்குளம் கோயிலில் ஆவணி திருவிழாவில் அம்மன் வீதியுலா appeared first on Dinakaran.