- நாயக்கர்பட்டி அரசு பள்ளி
- அறந்தாங்கி
- அறந்தாங்கி.ஆக
- புதுக்கோட்டை மாவட்டம்
- அரந்தாங்கி
- போர்ட் சிட்டி ரோட்டரி சங்கம்
- நாயக்கர்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- ஜனாதிபதி
- அப்துல் பாரி
- நாயக்கர்பட்டி அரசு பள்ளி
- தின மலர்
அறந்தாங்கி.ஆக.20: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நாயக்கர்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைவர் அப்துல் பாரி தலைமை வகித்தார். துணை ஆளுநர் மருத்துவர் விஜய், பொருளாளர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மருத்துவ கழகம் அறந்தாங்கி கிளை முன்னாள் தலைவர் மருத்துவர் லட்சுமி நாராயணன், 100 மாணவ, மாணவியர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பீட்டில் விளையாட்டு சீருடைகளை வழங்கினார்.
தொடர்ந்து விளையாட்டு போட்டி மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு வார்டு கவுன்சிலர் ஜம்புலிங்கம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கருப்பையா, ரோட்டரி நிர்வாகி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுலின் வரவேற்றார். பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் நித்யா, ராஜேஸ்வரி, யாஸ்மின் ராணி, இலக்கியா ஆகியோர் செய்திருந்தனர்.
The post அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கல் appeared first on Dinakaran.