×

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

காரைக்கால்,ஆக.20: காரைக்காலில் மின்துறை பல மாதங்களாக நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காரைக்காலில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள ஊழியர்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி மின்துறை ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மின்துறை தனியார்மயம் எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் வேல்மயில்,பொது செயலாளர் பழனிவேல், பொருளாளர் வெங்கடேசப்பெருமாள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 25 மின்துறை ஊழியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் ஆறு நபர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் போதிய ஊழியர்கள் பற்றாக்குறை இன்மை காரணமாக ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் அவ்வபோது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.புதுச்சேரியில் மின்துறை ஊழியர் முருகையன் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்த அலுவலகத்தில் மின் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.

24 மணி நேரம் பணி புரியும் மின்துறை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. மழை காலம் வருவதற்கு முன் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.டெஸ்டர் பணியிடம் நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றாமல் தவறும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் புதுச்சேரியில் உயிரிழந்த மின்துறை ஊழியருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

The post காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்