- திருவாடானை
- தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலை
- அரசூர்
- சின்னகீரமங்கலம்
- Kallur
- தானியத்தூர்
- கடங்குடி
- பெருமானேந்தல்
- வில்லிக்கோடு
திருவாடானை, ஆக.20: திருவாடானை வழியாக தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசூர், சின்னக்கீரமங்கலம், கல்லூர், திருவாடானை, திணையத்தூர், காடாங்குடி, பெருமானேந்தல் வரை சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக முட்செடிகள் வளர்ந்து சாலையில் உள்ள வெள்ளைக்கோடு வரை படர்ந்து கிடப்பதால் அவ்வழியாக தினசரி செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் அப்பகுதிகளில் உள்ள ஒரு சில ஆபத்தான வளைவுகளில் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்களை கணிக்க முடியாமல் சாலையோரத்தில் செல்லும்போது இந்த முட்புதர்களில் சிக்கி விழுவதுடன் விபத்து ஏற்பட்டு அதனால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆகையால் இந்த தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பாதசாரிகள் மற்றும் டூவீலர்கள் செல்லும் பகுதியான வெள்ளைக்கோடு வரை வளர்ந்து படர்ந்த முட்புதர்களை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த ஜூன்20ம் தேதியன்று படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வளர்ந்து படர்ந்த முட்புதர்களை நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி மூலம் அகற்றி அப்புறப்படுத்தினர்.
The post சாலையோரம் வளர்ந்த முட்புதர்கள் அகற்றம் appeared first on Dinakaran.