×

குன்னூர் அருகே சேற்றில் சிக்கிய காட்டுமாடு உயிருடன் மீட்பு

 

ஊட்டி, ஆக. 20: நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாகும். இங்கு கரடி, சிறுத்தை, யானை, காட்டுமாடு உட்பட பல்வேறு வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுமாடுகள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழைந்து விவசாயிகளை அச்சுறுத்தி வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சேலாஸ் அருகேயுள்ள மேல்பாரதி நகர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் காட்டுமாடு ஒன்று மேய்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காட்டுமாடு சேற்றில் சிக்கியது.

இதனை அறிந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிருக்கு போராடிய காட்டுமாடு குறித்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  இதனை தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, பின் சேற்றில் சிக்கிய காட்டுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டுமாடு மீட்கும் பணிகள் சற்று தாமதம் ஏற்பட்டது. பின் கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு காட்டுமாட்டை உயிருடன் மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விரட்டப்பட்டது.

The post குன்னூர் அருகே சேற்றில் சிக்கிய காட்டுமாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Gunnar ,FEEDER, OK ,Nilgiri District ,Kunnur ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் ஓணம் கொண்டாட வரும்...