×

நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா

 

பந்தலூர், செப்.11: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பலவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிப்புரிந்து வரும் கமலாம்பிகை பள்ளிக்கல்வித்துறை சார்பில் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு நேற்று பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

அய்யன்கொல்லி பஜாரில் இருந்து சென்டைமேளம் முழங்க பேரணி புறப்பட்டு பள்ளி வளாகத்தில் நல்லாசிரியர் கமலாம்பிகைக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் யூனியன் கவுன்சிலர் ஜிஜி, கவுன்சிலர் ஜிஷா, முன்னாள் கவுன்சிலர் தாமஸ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருச்செல்வி, ஆசிரியர்கள் சில்வர்ஸ்டார், மகாலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Kamalambikai ,Ambalavyal Government High School ,Nilgiris district ,Radhakrishnan ,School Education Department ,Dinakaran ,
× RELATED கலெக்டர் வழங்கினார் பிதர்காடு...