×
Saravana Stores

இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்ற பண்பாட்டு சூழல் நடைபயணம்

மதுரை, ஆக. 20: மதுரை மாவட்டத்தில் உள்ள வரலாறு மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் நோக்கில் பண்பாட்டு சூழல் நடை பயணம், இயற்கை ஆர்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தின் அறங்காவலரும், கோயில்கள் மற்றும் சிற்பத்துறை ஆய்வாளருமான தேவி அறிவுச்செல்வம்,

நீரியல் ஆய்வாளர் தமிழ்தாசன் தலைமையில் மேலூரை அடுத்த வெள்ளமலை மற்றும் பனங்காடி மலைப்பகுதி கோயில் காடுகளில், பண்பாட்டு சூழல் நடையணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், சூழலியல், பறவைகள், வனவிலங்குகள், நீர்நிலை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்விட அமைப்புகள், அவற்றின் எண்ணிக்கை, அப்பகுதியில் வசிக்கும் மக்க
ளின் பாரம்பரிய பழக்கங்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். இதுகுறித்த விரிவான அறிக்கை மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

The post இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்ற பண்பாட்டு சூழல் நடைபயணம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Nature and Culture Center ,
× RELATED மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி...