- புதுச்சேரி
- லெப்டினன்ட்
- கவர்னர்
- கைலாஷ்நாதன்
- தில்லி
- நரேந்திர மோடி
- தமிழிசாய் ச Sound ந்தரராஜன்
- யூனியன்
- பிரதேசம்
- மகாராஷ்டிரா
புதுச்சேரி ஆக. 20: புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஆளுநராக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்த பிறகு, தற்போதைய மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 27ம்தேதி குடியரசு தலைவர் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஆளுநர்களை மாற்றம் செய்தும், புதிய ஆளுநர்களை நியமனம் செய்தும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி குஜராத் அரசின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த கைலாஷ் நாதன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடியை, புதிதாக நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக பிரதமருடன், கைலாஷ்நாதன் ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது. புதுச்சேரியின் நிரந்தர துணைநிலை ஆளுநராக பதவியேற்றபின் முதன்முதலாக டெல்லி பயணம் மேற்கொண்ட கைலாஷ்நாதன், பிரதமரை சந்தித்து பேசியுள்ள நிலையில், அடுத்ததாக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும்சந்தித்து பேசினார் கைலாஷ்நாதன், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரது டெல்லி பயணம் புதுச்சேரியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
The post பதவியேற்றபின் முதன்முதலாக டெல்லி பயணம் புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பிரதமருடன் சந்திப்பு appeared first on Dinakaran.