- பூந்தமல்லி எஸ்.ஏ
- of
- திருவள்ளூர்
- பூந்தமல்லி
- எஸ்.ஏ.
- மின்னணுவியல் மற்றும் தொடர்பாடல் பொறியியல் திணைக்களம்
- பொறியியல்
- கல்லூரி
- தின மலர்
திருவள்ளூர்: பூந்தமல்லி எஸ்.ஏ. இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை ‘மைக்ரோ டு நானோ- இன்ஸ்பைரிங் கிரியேஷன்ஸ்’ என்ற தலைப்பில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு துறையில் ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக 6 நாள் ஆசிரிய மேம்பாட்டு திட்ட பயிற்சியை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ராதிகா விரிவான முன்னுரையை வழங்கினார். சென்சார்கள் மற்றும் செயல்முறை கட்டுப்பாட்டு மையத்தின் துணைத் தலைவர், இந்திய அரசு தகவல் தொழில்நுட்பத்தின் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையின் முன்னாள் விஞ்ஞானி வி.என்.மணி முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு ஆசிரியர் மேம்பாட்டு திட்டத்தின் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த பயிற்சியில் புதுச்சேரி என்ஐடி பேராசிரியர் மலைய குமார் நாத், அண்ணா பல்கலைக்கழக சிஇஜி வளாக பேராசிரியர் வி.ஜெயலட்சுமி, சென்னை எம்ஐடி பேராசிரியர் கே.மாரியம்மாள், சவீதா பொறியியல் கல்லூரி பேராசிரியர் பி.பரணீதரன், பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஏ.வி.ஆனந்தலட்சுமி, மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் எஸ்.ராமசாமி, காஞ்சிபுரம் ஐஐஐடிடிஎம் பேராசிரியர்கள் நூர் மகமது, குமார் பிரசன்னஜித் பிரதான் ஆகியோர் செமிகண்டக்டர் வடிவமைப்பு களத்தில் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர்.
The post பூந்தமல்லி எஸ்.ஏ. இன்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்ட பயிற்சி தொடக்க விழா appeared first on Dinakaran.