×
Saravana Stores

இலவச பேருந்து அட்டை வழங்கும் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 100% பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவச பேருந்து பயண அட்டை பெறுவதற்கான முகாம் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள முக்தி நிறுவனத்திலும் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

100% பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID Card), ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மருத்துவச்சான்று, புகைப்படம், அசல் ஆவணங்களை கொண்டு வரவேண்டும். தங்கள் நிறுவனங்களிடமிருந்து Bonofied Certificate பெற்று இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

மேலும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை துறையின் சார்பாக 2 இ-சேவை பணியாளர்கள் முகாம்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  எனவே சென்னை புறநகர் பகுதியில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பேருந்து பயண அட்டை பெறுவதற்கு ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பதிவேற்றம் செய்தபிறகு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வாயிலாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு இ-பஸ்பாஸ் பெற்று பயனடையலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

 

The post இலவச பேருந்து அட்டை வழங்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Collector ,Arunraj ,Chengalpattu district ,Chennai ,
× RELATED செங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்