×

கறம்பக்குடி அருகே அனுமதியின்றி அக்னி ஆற்றில் மணல் அள்ளிய வாலிபர் கைது

 

கறம்பக்குடி, ஆக.19: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆவனாண்டி கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (37). இவர் திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக கறம்பக்குடி போலீசாரக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து எஸ்ஐ மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு யூனிட் மணலை அனுமதியின்றி மினி லாரியில் அள்ளி கொண்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் வந்தார். அப்போது போலீசார், அந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது மணல் கடத்துவது தெரியவந்தது. இதை தொடர்ந்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கறம்பக்குடி அருகே அனுமதியின்றி அக்னி ஆற்றில் மணல் அள்ளிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Agni river ,Karambakudi ,Ravindran ,Avanandi Kollai village ,Pudukottai district ,Karambakudi police ,Vivanancheri ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி வேளாண்மை அலுவலகம் எதிரே...