பெரியகுளம், ஆக.19: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர்பிடிப்புப் பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 12ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் கன மழையால் மேலும் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று, ஏழாவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post பெரியகுளம் அருகே கும்பக்கரையில் தொடர் வெள்ளப்பெருக்கு: 7வது நாளாக தடை appeared first on Dinakaran.