×

3,165 டன் உணவு தானியங்கள் வரத்து

 

சேலம், ஆக.19: சேலம் சத்திரம் ரயில்வே கூட்ஸ் ஷெட்டிற்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்கள், கோழித்தீவனம், உரம் உள்ளிட்டவையும், ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடும் சரக்கு ரயில்களில் வருகிறது. இதனை இறக்கி, சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று, சரக்கு ரயிலில் 3,165 டன் துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் வந்தது.

இந்த உணவு தானியங்களை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் தானிய அறுவடை முடிந்திருப்பதால், வரும் நாட்களில் இன்னும் அதிகப்படியான சரக்கு சேலத்திற்கு வந்திறங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 3,165 டன் உணவு தானியங்கள் வரத்து appeared first on Dinakaran.

Tags : Salem ,Andhra ,Salem Chatram Railway Goods Shed ,
× RELATED தூய்மை குறித்து மாணவர்கள் கலைநிகழ்ச்சி