- குரங்கிபாக்ஸ் வெடிப்பு
- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுப்பிரமணியன்
- குரங்கு
- அமைச்சர் மா.
சென்னை: குரங்கம்மை பாதிப்பை தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது எனவும் தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “குரங்கம்மை நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை யாரும் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களியேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அறிகுறி ஏதேனும் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வது வேடிக்கையானது. எந்த ஒரு திட்டத்தையும் புரிதல் இன்றி விமர்சனம் செய்யக்கூடாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மா கிளினிக் தொடங்கினார்கள், ஆனால் அது மக்களுக்கான திட்டமாக இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக புகார் கூறுகின்றனர்.
இது வேடிக்கையானது . கடந்த ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள் என்பதை ஜெயக்குமார் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட எத்தனையோ திட்டங்கள் அதிமுகவினரால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. யார் ஸ்டிக்கர் ஒட்டினார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
பழமைவாய்ந்த ஒரு நூற்றாண்டு மருத்துவமனை, அரசு சைதாப்பேட்டை மருத்துவமனை. சைதாப்பேட்டை மருத்துவமனையை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. ரூ. 26 கோடி மதிப்பில் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க திட்டம்” என தெரிவித்துள்ளார்.
The post குரங்கம்மை பாதிப்பை தொடர்ந்து விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.