×

ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்து விட்டு நீட் எதிர்ப்பு போராளி போர்வையில் இப்போது வர வெட்கப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

சென்னை: ஆட்சியில் இருந்தபோது நீட்டை ஆதரித்துவிட்டு, இப்போது நீட் எதிர்ப்பு போராளி போர்வை போர்த்திக்கொண்டு வருவதற்கு எடப்பாடி வெட்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு தோல்வியால் தஞ்சாவூரில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் சவடால் விட்டிருக்கிறார்.

நீட் தேர்வினால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தவறான பொய்யை மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் என ஆட்சியில் இருந்த போது சொன்னவர்தான் பழனிசாமி. அப்படி பழனிசாமி பேசியே 14 மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாகி, ரத்தக் கறையை உடல் முழுவதும் பூசிக் கொண்டவர்தான் பழனிசாமி.நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே.

இப்போது நீட் எதிர்ப்பு போராளி போர்வை போர்த்தி கொண்டு வருவதற்கு வெட்கப்பட வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேறியது.
அதன்பிறகு மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது, அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன், இந்த மசோதா நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு பலம் சேர்ப்பதால் ஆதரிக்க முடியாது என்று சொன்னார். மசோதாவை எதிர்த்த அதிமுக என்ன செய்திருக்க வேண்டும்.

மசோதாவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும் அல்லவா. ஆனால், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதாவது மசோதா நிறைவேற மறைமுகமாக அதிமுக ஆதரவு அளித்தது. தீர்மானம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக நீட் தேர்வை பற்றி எல்லாம் பேசாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்து விட்டு நீட் எதிர்ப்பு போராளி போர்வையில் இப்போது வர வெட்கப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : NEET ,Minister ,Sivashankar ,Edappadi Palaniswami ,CHENNAI ,Edappadi ,
× RELATED நீட் முதுநிலை தேர்வில் டாக்டர் தந்தையை விட அதிக மதிப்பெண் எடுத்த மகன்