×
Saravana Stores

வேறொரு சூழலில், என் விளையாட்டை 2032 வரை தொடர வாய்ப்பு உள்ளது: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உருக்கம்

டெல்லி: வேறொரு சூழலில், என் விளையாட்டை 2032 வரை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பேசியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் மல்யுத்த வீராங்கனைக்கு மேள தாளங்களுடன் சக வீரர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு தெரிவித்தனர். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இறுதிச் சுற்றில் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதாகக் கூறி வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நேற்றைய தினம் வெளியிட்ட உருக்கமான அறிக்கையில்,

என் அணிக்கும், என் குடும்பத்தினருக்கும் சக இந்தியர்களுக்கும், சொல்லிக் கொள்வது, நாம் எந்த இலக்கை அடைவதற்காக உழைத்தோமோ, அது நிறைவேற்றப்படாமல் இருப்பதாக உணர்கிறேன். சில நேரங்களில் நாம் தவறவிட்டவை, நமக்கு கிடைக்காமலே போய்விடும். வேறொரு சூழலில், என் விளையாட்டை 2032 வரை தொடர வாய்ப்பு உள்ளது. என் போராட்ட குணமும், மல்யுத்தமும் எப்போதும் எனக்குள் இருக்கும். வருங்காலத்தில் எனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை கணிக்க முடியாது. ஆனால், என் மனதுக்கு சரி என தோன்றும் விஷயங்களை அடைய தொடர்ந்து துணிச்சலுடன் போராடுவேன்” பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தகுதி நீக்க விவகாரத்துக்கு பின் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ளார்.

The post வேறொரு சூழலில், என் விளையாட்டை 2032 வரை தொடர வாய்ப்பு உள்ளது: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Vinesh Bogath ,Delhi ,PARIS ,OLYMPICS ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; 10வது நாளாக அருவிகளில் குளிக்க தடை!