தஞ்சாவூர், ஆக.17: ‘ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும்’. இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் கூல் வார்த்தல், திருவிழாக்கள், பால் குட ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். அம்மன் கோயில்களில் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும்.
நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கோடி அம்மன் கோயில், வட பத்திரகாளியம்மன் கோயில், புது ஆற்றங்கரை சக்தி முனியாண்டவர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அம்மனை நீண்ட வரிசையில் நின்று மக்கள் தரிசனம் செய்தனர்.
The post ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.