- விவசாய கண்காட்சி
- மதுரை
- வேலம்மாள் குழு
- இந்தியாவின் ஐக்கிய வர்த்தக பரிவர்த்தனை
- ஜடா சிதறல் வளாகம்
- மதுரை வேலம்மாள் மருத்துவமனை
- வேலம்மாள் குழு
- முத்துராமலிங்கம்
மதுரை, ஆக. 17: மதுரையில் யுனைடெட் டிரேட் பேர்ஸ் ஆப் இந்தியா நடத்தும் மாபெரும் விவசாய கண்காட்சி நேற்று துவங்கியது. மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகிலுள்ள ஜடா ஸ்கட்டர் வளாகத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை, வேலம்மாள் குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு வேளாண்துறை இணை இயக்குநர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
நாளை (ஆக.18) வரை நடைபெறும் இக் கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட விவசாய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. விவசாயிகளின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில், அதிநவீன இயந்திரங்கள், தானியங்கி மின் மோட்டார்கள், விதைகள், சோலார் பம்புகள், உரங்கள், மாடித்தோட்டம், அன்றாடம் வீட்டுக்கு பயன்படும் தோட்டக்கருவிகள் மற்றும் டிராக்டர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது.
கண்காட்சி துவக்க விழாவில் விவசாயிகள் சங்க தலைவர்கள் ராமர், மணிகண்டன், விவசாயக் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். இக்கண்காட்சியை காண அனுமதி இலவசம். இதற்கான ஏற்பாடுகளை யுனைடெட் டிரேட் பேர்ஸ் நிர்வாக இயக்குநர் பாக்கியராஜ் செய்துள்ளார்.
The post மதுரையில் விவசாய கண்காட்சி வேலம்மாள் குழும தலைவர் துவக்கினார் appeared first on Dinakaran.