புதுடெல்லி: பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியுவுக்கு இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. பாக்ஸ்கான் நிறுவனம் தனது ஐபோன் தயாரிப்பு வசதியை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் ஒப்பந்த உற்பத்தியாளராக பாக்ஸ்கான் உள்ளது. இதன் மூலமாக நாட்டில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருது பெற்ற பின் முதல் முறையாக பாக்ஸ்கான் தலைவர் யங் லியு இந்தியா வந்துள்ளார். டெல்லியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை யங் லியு சந்தித்து பேசினார். இது குறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘பாக்ஸ்கான் தலைவர் யங் லியூவை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவிலும் உலகம் அளவிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினோம். சரியான ஆதரவுடன் இந்தியாவில் தொழில்நுட்ப துறையை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல முடியும்”என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ராகுலுடன் பாக்ஸ்கான் தலைவர் சந்திப்பு appeared first on Dinakaran.