- துணை
- Dasildar
- Bata:
- திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
- மன்னார்குடி
- திருவாரூர் லஞ்சம் எதிர்ப்புக் காவல்துறை
- துணை
- மாவட்டம்
- பட்டா
- திருவாரூர் மாவட்டம்
- கீழ்
- பழம் மாரியம்மன்
- கோவில்
- சன்னதி தெரு
- பேட்ட: திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
- தின மலர்
மன்னார்குடி: பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை வட்டாட்சியரை திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் கோவி சக்திவேல் (51). திமுக வார்டு செயலாளர். இவரது மனைவி சித்ரா ரேவதி (45). 7 வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர். இந்தநிலையில், கோவி சக்திவேல், தனது மனைவி சித்ரா பெயரில் உள்ள பட்டா ஒன்றில் பெயர் திருத்தம் மேற்கொள்ளுவது தொடர்பாக கடந்த 3ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் (40) என்பவர் பட்டாவில் பெயர் திருத்தும் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கோவி சக்திவேல், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் அவர்களது ஆலோசனை பேரில் கோவி சக்திவேல் ரூ.15 ஆயிரம் பணத்துடன் நேற்று மாலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அப்போது அங்கிருந்த துணை வட்டாட்சியர் நாகராஜுவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி பூரணி தலைமையிலான இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் நகராஜூவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து நாகராஜ் மற்றும் அலுவலகத்தில் இருந்த மற்ற அதிகாரிகளிடமும் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டார்.
The post பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது: திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.