×
Saravana Stores

வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகி வருகிறது. முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. நீட் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில், அந்தத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் அல்லது தமிழ்நாட்டிற்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,NEET ,Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Dhanush ,Silamba Velangad ,Pattukottai ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட...