×
Saravana Stores

கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பாடுகளை மேம்படுத்த பணியாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை: கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து கரும்பு உற்பத்தியை பெருக்கவும், ஆலை செயல்பாடுகளை மேம்படுத்தவும் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், நடப்பு 2023-24 அரவைப் பருவத்தின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்வரும் 2024-25 அரவை பருவத்திற்கான கரும்பு உற்பத்தி, சுத்திகரிப்பு பணிகள், இணைமின் உற்பத்தி திட்ட செயல்பாடுகள், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து கரும்பு உற்பத்தியை பெருக்கவும், ஆலை செயல்பாடுகளை மேம்படுத்தவும் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், சர்க்கரைத் துறை இயக்குநர், கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சர்க்கரை கழக பொது மேலாளர், சர்க்கரைத்துறை உயர் அலுவலர்கள், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பாடுகளை மேம்படுத்த பணியாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Minister ,CHENNAI ,MRK Panneerselvam ,M.R.K. Panneerselvam ,Dinakaran ,
× RELATED மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு...