×

இன்று 91வது பிறந்தநாள் முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: சென்னை மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

சென்னை: முரசொலி மாறனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதுகுறித்து, சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு: கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுகவின் மூளையாக செயல்பட்டவரும், மத்திய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு 17ம் தேதி (இன்று) காலை 9 மணியளவில் கோடம்பாக்கம், `முரசொலி’ அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர் மலர் மாலை அணிவிக்கின்றனர். இதில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இன்று 91வது பிறந்தநாள் முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: சென்னை மாவட்ட செயலாளர்கள் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Murasoli Maran ,Chennai District Secretaries ,Chennai ,M. K. Stalin ,Murasoli ,Kodambakkam ,Chennai district DMK ,Chennai district ,
× RELATED பனப்பாக்கத்தில் நாளை தொழிற்பூங்கா...