×

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்… 11 விரைவு ரயில்கள் எழும்பூர் பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என அறிவிப்பு!!

தாம்பரம் : தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் ரயில் போக்குவரத்து சேவையில் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், அயோத்திய கண்டோன்மெண்ட் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் சேது அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூருக்கு பதிலாக இந்த ரயில் பெரம்பூர் நிறுத்தத்தில் நின்று செல்கிறது. இந்த ரயில் கூடூர் சந்திப்பு வரை தனது வழக்கமான வழித்தடத்தில் பயணித்து பிறகு, கொருக்குப்பேட்டை சந்திப்பில் இருந்து பெரம்பூர், அரக்கோணம், செங்கல்பட்டு சந்திப்பு வழியாக விழுப்புரம் வந்தடைகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும், சேலம் அதி விரைவு ரயில் மற்றும் குருவாயூர் விரைவு ரயில்கள் சென்னை கடற்கரை, பெரும்பூர், அரக்கோணம் சந்திப்பு வழியாக செங்கல்பட்டு சந்திப்பை வந்தடைகின்றன. இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை எழும்பூர் முதல் மதுரை வழியாக செல்லும் தேஜஸ் விரைவு ரயில் உள்ளிட்ட 11 ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது என்றும் இவை செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் இன்று கொல்லம், நாகர்கோவில், தஞ்சாவூர், செங்கோட்டை உள்ளிட்ட சென்னை எழும்பூர் வந்தடைய வேண்டிய 14 ரயில்கள் தாம்பரத்தில் நிற்காமல் மாம்பலம் வந்தடைய உள்ளன. மதுரை , திருச்சி, மன்னார்குடி உள்ளிட்ட 9 ஊர்களில் இருந்து சென்னை எழும்பூர் வந்தடைய வேண்டிய ரயில்களில் 8 ரயில்கள் செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்பட உள்ளதாகவும் திருச்செந்தூரில் இருந்து புறப்படும் செந்தூர் அதிவிரைவு ரயில் மட்டும் விழுப்புரம் சந்திப்போடு நிறுத்தப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்… 11 விரைவு ரயில்கள் எழும்பூர் பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tambaram railway station ,Chengalpattu ,Rampur ,Tambaram ,Chennai ,Southern Railway ,Iotiya ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல்...