×
Saravana Stores

புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் உதவ கூடிய இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட்

ஆந்திரா: புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08 இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது. பேரிடர் கால கண்காணிப்பு, காலநிலை, காட்டுத் தீ கண்காணிப்பு பணிகளை இ.ஒ.எஸ்-8 செயற்கைகோள் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் காற்றின் வேகம், மண்ணின் ஈரப்பதம், ஹிமாலய மலையின் பனிப்பொழிவு அளவு தரவுகளையும் இஓஎஸ்-8 தரவல்லது.

The post புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் உதவ கூடிய இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Earth ,Indian Space Research Institute ,ISRO ,Satish Dhawan ,Sriharikota ,Dinakaran ,
× RELATED சிறுகதை