×
Saravana Stores

நீர்வரத்து 16,500 கனஅடியாக சரிவு: மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,500 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளதால் உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை சற்று தணிந்துள்ளதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.

காவிரியில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 26,864 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16,500 கனஅடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்ததால் அணையின் உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீரும், மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

The post நீர்வரத்து 16,500 கனஅடியாக சரிவு: மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Mettur ,Okanagan Cauvery ,Cauvery ,Karnataka ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு