- அரூர்
- புளுதியூர்
- கோபிநாதம்பட்டி கூட்ரோடு
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- சேலம்
- நாமக்கல்
- திருவண்ணாமலை
- கால்நடைகள்
- தின மலர்
அரூர், ஆக.15: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ₹6,500 முதல் ₹46,000 வரையும், ஆடு ₹5,000 முதல் ₹9,300 வரையும் விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ₹40லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ₹40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.