×

ஆயத்த ஆடையகம், நவீன சலவையகம் அமைக்க ₹3 லட்சம் அரசு மானியம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம்

திருவண்ணாமலை, ஆக.15: தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினரின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் பதிட்டம் செயல்படுத்தி வருகிறது. ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ₹3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக, செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ. ₹1லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

அதேபோல், நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ₹3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக, செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவர் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆயத்த ஆடையகம், நவீன சலவையகம் அமைக்க ₹3 லட்சம் அரசு மானியம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் appeared first on Dinakaran.

Tags : Collector Bhaskara Pandian Information ,Backward Welfare Department ,Thiruvannamalai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்