×
Saravana Stores

கரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ள வாய்க்கால் தூர் வாரும் பணி

கரூர், ஆக. 15: கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு புகளூர் பிரிவு வாய்க்காலில் இருந்து வரும் பள்ள வாய்க்கால், என் புதூர், சேரப்பாடி ,நெரூர், வேடிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாக அமைந்துள்ளது.

இந்த வாய்க்காலை பொதுமக்கள் தூர் வாரி ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும் கோரிக்கை விடுத்தனர்.இதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப் பட்டு, கரூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப் பாளையம் முதல் நன்னியூர் ஊராட்சி வரை பள்ளவாய்க்காலில் சுமார் ஒரு கி.மீ தொலைவிற்கு ஆகாயத் தாமரை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வி.கே.வேலுச்சாமி தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post கரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ள வாய்க்கால் தூர் வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Karur Assembly Constituency ,Fund ,Karur ,Palla canal ,Bukulur ,N Putur ,Cherappadi ,Nerur ,Vedichipalayam ,Karur Assembly ,Dinakaran ,
× RELATED காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட வேண்டும்: