×
Saravana Stores

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநரின் தேநீர் விருந்து.. திமுக புறக்கணிப்பதாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவிப்பு..!!

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் நாளை அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.நாளை 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து அன்று மாலை அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது.

ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்து ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்., கம்யூ., வி.சி.க., மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார். அரசு சார்பாக பங்கேற்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை தெரிவிப்பார் என்றும் திமுக கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூறினார். அதேநேரத்தில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சுதந்திர தினத்தையொட்டி ஆளுநரின் தேநீர் விருந்து.. திமுக புறக்கணிப்பதாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Tea Party ,Independence Day ,R. ,Chennai ,Dimuka ,78th Independence Day ,George's Fort ,K. Stalin ,Secretary of the ,Organization ,R. S. ,Dinakaran ,
× RELATED ஆளுநருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு