×

விழுப்புரம் சூலப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா: 64அடி உயரமுள்ள தேர் சரிந்து விபத்து: உயிர் தப்பிய பக்தர்கள்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் சூலப்பிடாரி அம்மன் கோயில் தூக்கு தேர் சரிந்ததில் பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அருகேயுள்ள கடையம் கிராமத்தில் பழமைவாய்ந்த சூலப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்குதேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்த 2022ம் ஆண்டில் தூக்கு தேர்விழா நடைபெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து தூக்கு தேர்விழா நேற்று தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. கடையத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியிலிருந்து 64 அடி உயரமுள்ள 3 டன் எடை கொண்ட தூக்கு தேரினை அப்பகுதியினர் இளைஞர்கள் 300 பேர் தோளில் சுமந்தவாரு கிராமத்தினை தூக்கி வந்தனர்.

இந்நிலையில் காலையில் தேரினை சுமந்தபடி இளைஞர்கள் சென்றபோது தேரானது சரிந்து கீழே விழுந்தது. தேர் கீழே விழுந்ததில் ஐந்து நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டன. காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து சாய்ந்த தேரினை மீண்டும் தூக்கி நிறுத்தி தேரோட்டம் மீண்டும் துவங்கி நடைபெற்றன.

The post விழுப்புரம் சூலப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா: 64அடி உயரமுள்ள தேர் சரிந்து விபத்து: உயிர் தப்பிய பக்தர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram Choolapidari Amman Temple Festival ,feet ,Villupuram ,Chulapidari Amman temple ,Kandachipuram ,Villupuram district ,Kadayam village ,Villupuram Chulapidari Amman temple festival ,
× RELATED மேட்டூர் அணையில் நீர்வரத்து 11,631 கனஅடியாக உயர்வு..!!